தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தகுதி சான்று பெறாமல் இயக்கும் பள்ளி வாகனங்கள் பறிமுதல்

தகுதி சான்று பெறாமல் இயக்கும் பள்ளி வாகனங்கள் பறிமுதல்

தகுதி சான்று பெறாமல் இயக்கும் பள்ளி வாகனங்கள் பறிமுதல்


ADDED : ஜூன் 05, 2026 04:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2026 04:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி; தர்மபுரி மாவட்டத்தில், தகுதிசான்று பெறாத பள்ளி வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என, மாவட்ட கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு பள்ளி வாகன சிறப்பு விதிகள்-, 2012ன் படி, ஒவ்வொரு வருடமும் பள்ளி வாகனங்கள் மாவட்ட ஆய்வுக்குழு சான்று பெற்ற பின்னர் தான் மாணவ, மாணவியரின் போக்குவரத்துக்கு பயன்-படுத்த வேண்டும். தகுதிச்சான்று புதுப்பித்தல் பணிக்காக, பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள், பணி-களை நிறைவு செய்து சான்று பெற்று இயக்க வேண்டும். சான்று பெறாத பள்ளி வாகனங்கள் மாணவ, மாணவியரின் போக்குவரத்துக்கு பயன்-படுத்தக்கூடாது. உத்தரவை மீறி, சாலையில் பஸ்களை இயக்கினால், வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us