/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 13, 2026 08:00 AM
தர்மபுரி: தர்மபுரி எல்.ஐ.சி., அலுவலகம் முன், காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் சார்பில், அகில இந்திய வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடந்தது. காப்பீட்டு கழக ஊழியர் சங்க தலைவர் சங்கர் தலைமை வகித்தார். கோட்ட இணை செயலாளர் சந்திரமௌலி, பொருளாளர் சங்கர், எல்.ஐ.சி., முகவர்கள் சங்க மாவட்ட தலைவர் மரியம்லுாயிஸ், எல்.ஐ.சி., லிகாய் முகவர்கள் சங்க கோட்ட தலைவர் சிவமணி, எல்.ஐ.சி., பென்சன்தாரர் நலச் சங்க மாவட்ட தலைவர் மாதேஸ்வரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர் நலச்சட்ட மாற்றங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். எல்.ஐ.சி., நிறுவனத்தில் புதிய ஊழியர்களை பணிநியமணம் செய்ய வேண்டும். இன்சூரன்ஸ் துறை யில், 100 சதவீத நேரடி அன்னிய முதலீட்டை திரும்ப பெற வேண்டும். எல்.ஐ.சி., பங்கு விற்பணையை ததனியாருக்கு விற்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

