/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லுாரியில் அறிமுக பயிற்சி
/
முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லுாரியில் அறிமுக பயிற்சி
முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லுாரியில் அறிமுக பயிற்சி
முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லுாரியில் அறிமுக பயிற்சி
ADDED : ஜூலை 01, 2025 01:25 AM
அரூர், அரூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், நேற்று முதல், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு துவங்கியது. பள்ளி முடித்து, புதியதாக கல்லுாரிக்கு வந்துள்ளதால், முதலாமாண்டு மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், ஒரு வாரகால அறிமுக பயிற்சித் திட்டம் மற்றும் வழிகாட்டும் பயிற்சி வகுப்பு நடந்தது. கல்லுாரி முதல்வர் மங்கையர்க்கரசி தலைமை வகித்தார்.
அரூர் எஸ்.ஐ., உதயகுமார் பேசுகையில், ''மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு பயன்படும் வகையில், தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும், மாணவர்கள் ஒழுக்கத்துடன் நடந்து கொண்டு, விடா முயற்சி, தன்னம்பிக்கை மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் பயணிக்க வேண்டும்,'' என்றார். தொடர்ந்து, அனைத்துத்துறை தலைவர்கள் பேசினர். இதில், முதலாமாண்டு மாணவர்கள் பங்கேற்றனர்.