/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க.,செயற்குழு கூட்டத்துக்கு அழைப்பு
/
தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க.,செயற்குழு கூட்டத்துக்கு அழைப்பு
தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க.,செயற்குழு கூட்டத்துக்கு அழைப்பு
தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க.,செயற்குழு கூட்டத்துக்கு அழைப்பு
ADDED : மே 07, 2025 01:40 AM
தர்மபுரி:தர்மபுரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., பொறுப்பாளரும், எம்.பி.,யுமான வக்கீல் மணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தர்மபுரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயற்குழு கூட்டம், இன்று மாலை, 4:00 மணிக்கு, மாவட்ட அலுவலகமான, கலைஞர் அறிவாலயம், தளபதி அரங்கில் நடக்கிறது. மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமை வகிக்கிறார். மாவட்ட பொறுப்பாளர் வக்கீல் மணி பேசுகிறார். கூட்டத்தில், வரும், 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கான, முதல்வரின் ஆலோசனை, தி.மு.க.,வின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், மதுரையில் ஜூன், 1ல் நடக்கும், தி.மு.க., பவள விழா உள்பட பல்வேறு ஆக்கப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
இதில், முன்னாள் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கிளை கழக நிர்வாகிகள், அணிகளின் தலைவர்கள், துணைத்தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.