/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரூரில் கொங்கு பல்நோக்கு பயிற்சி ஆலய திறப்பு விழாவிற்கு அழைப்பு
/
அரூரில் கொங்கு பல்நோக்கு பயிற்சி ஆலய திறப்பு விழாவிற்கு அழைப்பு
அரூரில் கொங்கு பல்நோக்கு பயிற்சி ஆலய திறப்பு விழாவிற்கு அழைப்பு
அரூரில் கொங்கு பல்நோக்கு பயிற்சி ஆலய திறப்பு விழாவிற்கு அழைப்பு
ADDED : பிப் 05, 2024 10:55 AM
அரூர்: தர்மபுரி மாவட்ட கொங்கு வேளாள கவுண்டர்கள் சங்கத் தலைவர் சந்திரசேகரன், வெளியிட்டுள்ள அறிக்கை:
கொங்கு சமுதாய இளைஞர்களின் மேம்பாட்டுக்காக, தர்மபுரி மாவட்டம், அரூர் கொங்கு வேளாளர் கவுண்டர்கள் திருமண மண்டபத்தில், 10 கோடி ரூபாய் மதிப்பில் கொங்கு பல்நோக்கு பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா, இன்று காலை, 9:00 மணிக்கு நடக்கவுள்ளது. இதை, தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., பொதுச்செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி திறந்து வைத்து, கொங்கு சமுதாயத்துக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
இந்த ஆலயம் அமைய நன்கொடை வழங்கியவர்களுக்கு முன்னாள் அமைச்சரும்,
எம்.எல்.ஏ.,வுமான செங்கோட்டையன் பாராட்டி நினைவுப்பரிசு வழங்கிறார். கொங்கு விழா மலரை, முன்னாள் அமைச்சர் அன்பழகன் எம்.எல்.ஏ., வெளியிட்டு வாழ்த்துரை வழங்குகிறார். கொங்கு இளைஞர் வழிகாட்டுதல் கருத்துக்களை, முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்.எல்.ஏ., வழங்கி பேசுகிறார். கொங்கு இளைஞர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி, முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான வேலுமணி பேசுகிறார். தீரன் சின்னமலையின் முழு உருவ வெண்கல சிலையை வடிமைத்த சிற்பிக்கு, முன்னாள் அமைச்சர் கருப்பணன் எம்.எல்.ஏ., நினைவுப்பரிசு வழங்கிறார். முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் கொங்கு சமுதாய இளைஞர்கள் மேம்பாட்டு திட்ட வழிமுறைகளை விளக்கி பேசுகிறார்.
த.மா.கா., மாநில இளைஞரணி தலைவர் யுவராஜ் சிறையோகிகளை சிறப்பித்து பேசுகிறார். முன்னாள் எம்.எல்.ஏ., சிங்காரம், தர்மபுரி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். நிறைவாக, தர்மபுரி மாவட்ட கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சங்கத் தலைவர் சந்திரசேகரன் நன்றி கூறுகிறார்.
கொங்கு சமுதாய இளைஞர்களின் மேம்பாட்டிற்காக நடக்கும் இந்த விழாவில், கொங்கு வேளாளர் சமூகத்தை சேர்ந்த பெற்றோர், மகளிர், இளைஞர்கள், மாணவர்கள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

