/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மாநாட்டில் பங்கேற்க கட்சியினருக்கு அழைப்பு
/
மாநாட்டில் பங்கேற்க கட்சியினருக்கு அழைப்பு
ADDED : ஜன 20, 2024 07:44 AM
தர்மபுரி தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலர் தடங்கம் சுப்பிரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் நாளை இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு நடக்க உள்ளது. இதில், தி.மு.க., தலைவர் முதல்வர் ஸ்டாலின் அறிவித்த படி, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பங்கேற்க உள்ளார். இந்த மாநாட்டில் தர்மபுரி மாவட்ட தி.மு.க., சார்பில், மாவட்டம், நகரம், ஒன்றியம், பேரூர் ஆகிய பகுதிகளிலிருந்து, 10,000க்கும் மேற்பட்ட கட்சியினர் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும். மேலும், அனைத்து பிரிவு அணி சார்பு தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் காலை, 7:00 மணிக்குள் மாநாட்டு மேடைக்கு வர வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.