/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
இருளப்பட்டி காணியம்மன் கோவில் தேர் திருவிழா
/
இருளப்பட்டி காணியம்மன் கோவில் தேர் திருவிழா
ADDED : ஆக 21, 2025 01:54 AM
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த இருளப்பட்டியில், காணியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த, 12ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
தொடர்ந்து கொடியேற்றம், சுவாமி திருக்கல்யாணம், வாண வேடிக்கை, கரகாட்டம், நையாண்டி மேளம், பல்லக்கு உற்சவம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை, தேரோட்டம் தொடங்கியது. தொடர்ந்து, அரூர் - சேலம் மெயின் ரோட்டில் தேர் நிலைநிறுத்தப்பட்டது. அப்போது, தேர் மீது பக்தர்கள் முத்துக்கொட்டை, உப்பு, மிளகை வீசி வழிபட்டனர்.
தேரோட்டத்தை தொடர்ந்து அ.புதுப்பட்டி, பாப்பம்பாடியில் தேர் கடை திருவிழாவும், வரும் வெள்ளிக்கிழமை முனி பிடிக்கும் திருவிழாவும், சனிக்கிழமை கவுண்டம்பட்டி, புதுப்பட்டி, பாப்பம்பாடியில், காணியம்மன் மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது. சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.