/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஆதவ் அர்ஜூனா பண்ணையார் இல்லையா? அ.ம.மு.க., கொள்கை பரப்பு செயலர் சரஸ்வதி கேள்வி
/
ஆதவ் அர்ஜூனா பண்ணையார் இல்லையா? அ.ம.மு.க., கொள்கை பரப்பு செயலர் சரஸ்வதி கேள்வி
ஆதவ் அர்ஜூனா பண்ணையார் இல்லையா? அ.ம.மு.க., கொள்கை பரப்பு செயலர் சரஸ்வதி கேள்வி
ஆதவ் அர்ஜூனா பண்ணையார் இல்லையா? அ.ம.மு.க., கொள்கை பரப்பு செயலர் சரஸ்வதி கேள்வி
ADDED : மார் 01, 2025 04:09 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் கச்சேரிமேட்டில், அ.ம.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், நேற்று முன்தினம் இரவு நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார்.
நடிகையும், கொள்கைபரப்பு செயலருமான சரஸ்வதி பேசியதா-வது: ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் செய்து, 10 தலை-முறைக்கு முன்னாள் அமைச்சர் அன்பழகன் சொத்து சேர்த்துள்ளார். அன்பழகன் இனிமேல் எந்த தேர்தலிலும், இரட்டை இலையே இருந்தாலும் வெற்றி பெற முடியாது. அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள், தி.மு.க., ஆட்சியில் முடக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க.,வில் இருந்து முனுசாமி, ஜெயக்குமார், உதயகுமார் நீக்கப்பட்டால் கட்சி நன்றாக இருக்கும்.
தமிழக மக்களுக்காக அ.தி.மு.க., ஒன்று சேர வேண்டும். தமிழ-கத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. தினமும் பெண்கள், குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படு-கின்றனர்.
எங்கள் கட்சியில் பண்ணையார்களுக்கு இடமில்லை, சராசரி மக்-கள்தான், 1967, 1977 சரித்திரம் திரும்பும் என நடிகர் விஜய் கூறுகிறார். ஆதவ் அர்ஜூனா சாமானியரா? பெரிய கோடீஸ்-வரர். அவர் லாட்டரி அதிபர் மார்ட்டின் மருமகன், அவர் பண்-ணையார் இல்லையா?
சகோதரர் விஜய் அவர்களே, அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஆகியோர் பண்ணையார்களுக்கோ, லாட்டரி அதிபர் மருமக-னுக்கோ சீட் கொடுக்கவில்லை, சாதாரணமானவர்களை எம்.எல்.ஏ.,வாக ஆக்கினர். ஜெயலலிதாவும் சாமானிய மக்களை எம்.எல்.ஏ., எம்.பி., மற்றும் அமைச்சராக்கி அழகு பார்த்தார். இவர்கள் யாரும் பண்ணையார்களை கட்சியில் சேர்க்கவில்லை. மத்திய அரசு ஹிந்தியை திணிக்கவில்லை.
இவ்வாறு பேசினார்