/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
இருளர் இன மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கல்
/
இருளர் இன மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கல்
ADDED : செப் 06, 2024 07:18 AM
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், கடத்துார் உள்வட்டம் துரிஞ்சி அள்ளி, சிங்கிரி அள்ளி, லிங்கநாயக்கன அள்ளி, குண்டல் மடுவு ஆகிய கிராமங்களை சேர்ந்த இருளர் இன மக்களுக்கு, பெருந்திட்ட முகாம், கடத்துார் டவுன் பஞ்., சமுதாய கூடத்தில் நேற்று நடந்தது.
இதில், நலவாரிய அட்டை, வீட்டுமனைப்பட்டா, ஜாதிச்சான்று, ரேஷன்கார்டு, மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 38 மனுக்கள் அளிக்கப்பட்டது. இதில், ஆன்லைனில் இருளர் இனச்சான்றிதழ் வழங்கக்கோரி விண்ணப்பித்த, 24 பேருக்கு, அரூர் ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர் சான்றிதழ்களை வழங்கினார். முகாமில், பாப்பிரெட்டிப்பட்டி தனி தாசில்தார் ஜெயசெல்வம் மற்றும் வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.