/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்
/
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 17, 2025 01:51 AM
தர்மபுரி, ஜாக்டோ - ஜியோர் சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது. ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் சுருளிநாதன், கவுரன், பாஸ்கர் தலைமை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், நடைமுறையில் உள்ள பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்காமல் இழைக்கப்பட்டு வரும், அநீதியை களைய வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில், 30 சதவீதத்திற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இடங்களில் தாலுகா அலுவலகம் முன், ஜாக்டோ - ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
* கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகம் முன்பு, ஜாக்டோ - ஜியோ சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார ஒருங்கிணைப்பாளர் மயில்வாணன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரன், மாநில ஒருங்கிணைப்பாளர் தியோடர் ராபின்சன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மாரப்பன், தங்கதுரை ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர். வட்ட செயலாளர் பெருமாள் நன்றி கூறினார்.
* ஜாக்டோ -- ஜியோ அமைப்பு சார்பில் தேன்கனிக்கோட்டை தாசில்தார் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கூட்டு முருகேசன், திம்மப்பா தலைமை வகித்தனர்.