/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரியில் ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்
/
தர்மபுரியில் ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 09, 2025 02:31 AM
தர்மபுரி, ஜாக்டோ - ஜியோ சார்பில், தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் சுருளிநாதான், கவுரன் உட்பட பலர் தலைமை வகித்தனர்.
தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் காமராஜ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தெய்வானை உட்பட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
இதில், பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள உயர் கல்விக்கான, ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்காத அநீதியை களைய வேண்டும்.
தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும், 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட பள்ளிக் கல்வித்துறை அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இடிந்து விழும் நிலையில்