/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கடகத்துார் சோமேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
/
கடகத்துார் சோமேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஆக 28, 2025 01:09 AM
தர்மபுரி, தர்மபுரி அருகே, சோமேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி அருகே, கடகத்துாரில், 1279ம் ஆண்டில் கட்டபட்ட மீனாட்சியம்மன் உடனாகிய சோமேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 15 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த, 25 அன்று விநாயகர் கோவிலில் இருந்து, முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
நேற்று முன்தினம், 2ம் கால வேள்வி, 3ம் கால வேள்வியை தொடர்ந்து, மருந்து சாத்துதல் உள்ளிட்டவை நடந்தன. நேற்று விநாயகர், திருமகள், முருகன், தென்முக கடவுள், அண்ணாமலையார் உட்பட திருச்சுற்று தெய்வங்களுக்கு திருக்குட நன்னீராட்டு நடந்தன. 4ம் கால வேள்வியை தொடர்ந்து, அம்மையப்பர் விமானங்களுக்கு கலசநீர் தெளிக்க பட்டு, சோமேஸ்வரர் மீனாட்சியம்மை மூலவருக்கு கலச நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது.
இதையடுத்து, சோமேஸ்வரர், மீனாட்சியம்மையார் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தனர். இதை, சிவனடியார்கள், சுற்றுவட்டார பகுதி மக்கள் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.