/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கடத்துார் கிரீன் பார்க் பள்ளி 7-ம் ஆண்டு விழா
/
கடத்துார் கிரீன் பார்க் பள்ளி 7-ம் ஆண்டு விழா
ADDED : ஏப் 15, 2025 06:27 AM
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், கடத்துார் கிரீன் பார்க் மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.சி., சீனியர் செகண்டரி பள்ளியில், 7ம் ஆண்டு விழா, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க பொதுச்செயலாளர் நந்தகுமார் தலைமையில் நடந்தது.
எம்.எல்.ஏ.,க்கள் பாப்பிரெட்டிப்பட்டி கோவிந்தசாமி, தர்மபுரி வெங்கடேஷ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிரீன் பார்க் கல்வி நிறுவனங்களின் தலைவர் எவரெஸ்ட் முனிரத்தினம் வரவேற்றார். சி.பி.எஸ்.சி., பள்ளி முதல்வர் பூவிழி முனிரத்தினம் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். ஆசிரியர் ஆரத்தியா ஆண்டறிக்கை வாசித்தார்.
விழாவில் கடந்தாண்டு, 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்-தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசு, கேடயங்கள் வழங்கப்பட்டன. மாநில, மாவட்ட, வட்டார, பள்ளி அளவில் நடந்த பல்வேறு போட்டி-களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், சோனா பில்டர்ஸ் தலைவர் சேலம் இன்ஜினியர் அசோசியேஷன் செல்வகுமார், தர்மபுரி வி.சி., மாவட்ட செய-லாளர் சாக்கன் சர்மா, தி.மு.க., ஒன்றிய செயலாளர் டாக்டர் பிரபு ராஜசேகர், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சம்பத், கடத்துார் பேரூராட்சி தலைவர் மணி, பா.ம.க., முத்துசாமி, முருகன் பேரூ-ராட்சி துணை தலைவர் வினோத், வணிகர் சங்க தலைவர் கண்-ணப்பன், செயலாளர் முத்துசாமி, முன்னாள் கவுன்சிலர் சங்கர், வி.சி., நிர்வாகி சென்னகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிர்வாக அலுவலர் ராஜா நன்றி கூறினார்.