ADDED : ஜூன் 19, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், அரூர் அடுத்த புழுதியூரில், முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தியாகி கக்கன், காமராஜ் அறக்கட்டளை சார்பில் நடந்த விழாவிற்கு, நிறுவன தலைவர் குமரேசன் தலைமை வகித்தார்.
இதில், கக்கனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில், காங்., நிர்வாகிகள் கோபன், ராமகிருஷ்ணன், மனோரஞ்சிதம், ராதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.