/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கர்நாடகா மதுபானம் கடத்தல்: ஆம்னி வேனுடன் டிரைவர் கைது
/
கர்நாடகா மதுபானம் கடத்தல்: ஆம்னி வேனுடன் டிரைவர் கைது
கர்நாடகா மதுபானம் கடத்தல்: ஆம்னி வேனுடன் டிரைவர் கைது
கர்நாடகா மதுபானம் கடத்தல்: ஆம்னி வேனுடன் டிரைவர் கைது
ADDED : மே 17, 2025 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்cகிருஷ்ணகிரி மாவட் டம், ஓசூர் மத்திகிரி சர்க்கிள் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வராசு மற்றும் போலீசார், மாநில எல்லையில் உள்ள டி.வி.எஸ்., சோதனைச்சாவடியில் நேற்று வாகன சோதனை செய்தனர். அப்போது,
அவ்வழியாக வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்த போது, கர்நாடகா மாநில மதுபானங்களை கடத்தி செல்வது தெரிந்தது.இதனால் வேனை ஓட்டி வந்த, தேன்கனிக்கோட்டை அடுத்த மதகொண்டப்பள்ளி அருகே உப்பாரப்பள்ளியை சேர்ந்த முனிராஜ், 31, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 24,440 ரூபாய் மதிப்புள்ள, 376 பாக்கெட் கர்நாடகா மதுபானம் மற்றும் வேனை பறிமுதல் செய்தனர்.