/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கருணாநிதியின் பிறந்த நாள் விழா செம்மொழி நாளாக கொண்டாட்டம்
/
கருணாநிதியின் பிறந்த நாள் விழா செம்மொழி நாளாக கொண்டாட்டம்
கருணாநிதியின் பிறந்த நாள் விழா செம்மொழி நாளாக கொண்டாட்டம்
கருணாநிதியின் பிறந்த நாள் விழா செம்மொழி நாளாக கொண்டாட்டம்
ADDED : ஜூன் 04, 2025 01:41 AM
தர்மபுரி, தர்மபுரி மேற்கு மாவட்ட, தி.மு.க., சார்பில், அரூர் ரவுண்டானா அண்ணாதுரை சிலை அருகே மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா, செம்மொழி நாளாக கொண்டாடப்பட்டது. விழாவுக்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான பழனியப்பன் தலைமை வகித்து, அலங்கரித்த கருணாநிதி உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். காரிமங்கலத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த விழாவிலும் கருணாநிதி உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அரூர் நகர செயலாளர் முல்லை ரவி வரவேற்றார். நிகழ்ச்சிகளுக்கு மாநில நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, ராஜேந்திரன் சூடப்பட்டி சுப்பிரமணி, மாவட்ட அவைத்தலைவர் மனோகரன், பொருளாளர் முருகன், துணை செயலாளர்கள் கிருஷ்ணகுமார், ராஜகுமாரி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சித்தார்த்தன், சென்னகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிகளில் ஒன்றிய செயலாளர்கள் வேடம்மாள், சந்திரமோகன், கோபால், சரவணன், தென்னரசு, அன்பழகன், சவுந்தர்ராஜன் மற்றும் சார்பு பணி மாவட்ட அமைப்பாளர்கள். துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தமிழழகன் நன்றி கூறினார்.