/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மேஸ்திரிக்கு கத்திக்குத்து2 பவுன் செயின் 'அபேஸ்'
/
மேஸ்திரிக்கு கத்திக்குத்து2 பவுன் செயின் 'அபேஸ்'
ADDED : ஏப் 18, 2025 01:30 AM
பாப்பிரெட்டிப்பட்டி:--ஈரோடு மாவட்டம், பவானி மெயின்ரோடு, நத்தக்காடு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சசி, 43. கட்டட மேஸ்திரி. இவருக்கு அஸ்லாம் என்ற மகனும், சகானாஸ்பேகம் என்ற மகளும் உள்ளனர். அஸ்லாம், தர்மபுரி மாவட்டம் பொம்மிடி வினோபாஜி தெருவிலுள்ள தன் தாத்தா வீட்டில் வசிக்கிறார்.
கடந்த, 15ம் தேதி இரவு, 11:30 மணிக்கு பொம்மிடியில் உள்ள தன் மகனை பார்க்க சசி வந்தார். அப்போது வீட்டின் அருகில், ஒரு ஆம்னி வேன் நின்றிருந்தது. அதில் அப்பகுதியை சேர்ந்த சிபி சக்கரவர்த்தி, 27, சச்சின்குமார், 26, இருந்தனர்.
அவர்களிடம், 'ஏன் இவ்வளவு நேரத்துக்கு நிற்கிறீர்கள்' என கேட்டபோது, சசியை அவர்கள் தகாத வார்த்தையால் திட்டி, சரமாரியாக தாக்கினார். பின் கத்தியால் சசியின் தலையில் வெட்டி விட்டு தப்பினர். இதில் சசி கழுத்தில் அணிந்திருந்த, 2 பவுன் செயின் மாயமானது. உறவினர்கள் சசியை மீட்டு, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகார் படி பொம்மிடி போலீசார் சிபி சக்கரவர்த்தி, சச்சின்குமார் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.