நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரிமங்கலம்: காரிமங்கலம் அருகேயுள்ள கெரகோடஹள்ளி பிரிவு சாலையில், காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ-.,க்கள் சுந்தரமூர்த்தி, அருண்குமார் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த மஹிந்திரா ஜீப்பை நிறுத்தி சோதனை செய்-தனர். அதில், 1.58 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 297 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தியது தெரிந்தது. காரை ஓட்டி வந்த ராஜஸ்தான் மாநிலம், பர்மீரை சேர்ந்த மகேந்திரா, 22, என்பவரை போலீசார் கைது செய்தனர்.