மதுவென நினைத்து களைக்கொல்லி மருந்தை குடித்த தொழிலாளி சாவு
மதுவென நினைத்து களைக்கொல்லி மருந்தை குடித்த தொழிலாளி சாவு
ADDED : செப் 01, 2026 06:09 AM

அ நிறம் | அளவு
பாலக்கோடு; தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த சீங்-கேரி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சதீஷ்குமார், 25. இவரது மனைவி ராஜேஸ்வரி, 23. தம்பதிக்கு, 2 பெண் குழந்தைகள் உள்ளன. சதீஷ்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. கடந்த ஆக., 12ம் தேதி மதியம், 12:30 மணிக்கு மது போதையில், செடிகளுக்கு பயன்படுத்தும் களைக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்ட-தாக தெரிவித்தார். உடனடியாக அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கும் பின், கிருஷ்-ணகிரியிலுள்ள தனியார் மருத்துவமனையிலும் சேர்த்தனர்.
கடந்த ஆக., 21ம் தேதி மீண்டும் தர்மபுரி அருசு மருத்துவ
மனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சையில் இருந்தவர் கடந்த, 30ம் தேதி காலை, 10:15 மணிக்கு உயிரிழந்தார். மகேந்திரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
