/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் லட்சார்ச்சனை
/
சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் லட்சார்ச்சனை
ADDED : அக் 23, 2025 01:14 AM
தர்மபுரி, தர்மபுரி டவுன் குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், 60-வது ஆண்டு கந்த சஷ்டி லட்சார்ச்சனை திருவிழா நேற்று காலை தொடங்கியது. மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடந்தன.
யாகசாலையில் இருந்து புனிதநீர் ஊர்வலமாக கொண்டு சென்று, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், துவாரபாலகருக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து சுவாமிக்கு கந்த சஷ்டி லட்சார்ச்சனை தொடங்கிய பின்னர், கந்த சஷ்டி விரதத்தை தொடங்கினர்.
அக்., 27- அன்று இரவு, 7:00 மணிக்கு கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தங்க மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி மற்றும் சூரபத்மன் புறப்பாடும், சூரசம்ஹார விழாவும் நடக்கவுள்ளது.* அரூர் மாரியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள அனுகிரக ஆஞ்சநேயர், வள்ளி, தேவசேனா சமேத கல்யாண சுப்ரமணியர் கோவிலில், 12ம் ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண உற்சவ விழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும், 27ல் காலை கல்யாண சுப்ரமணியர் மற்றும் சக்திவேலுக்கு அபிஷேகம், ராஜ அலங்காரம், மகா தீபாராதனை, மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. 28ல் சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி, சுவாமி திருவீதி உலாவும் நடக்க உள்ளது.