/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தமிழக முதல்வரை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
/
தமிழக முதல்வரை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 28, 2024 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக முதல்வரை கண்டித்து
வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி, நவ. 28-
தமிழக முதல்வர் ஸ்டாலினை கண்டித்து, வக்கீல்கள் சமூகநீதிப் பேரவை சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் தர்மபுரி நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடந்தது. வக்கீல்கள் சமூகநீதிப் பேரவையின் மாநில செயலாளர் மகாலிங்கம் தலைமை தாங்கினார்.
தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்த் முன்னிலை வகித்தார். இதில், பா.ம.க., தலைவர் ராமதாசுக்கு பதில் கூற வேண்டிய அவசியமில்லை என, கூறிய தமிழக முதல்வர் ஸ்டாலினை கண்டித்து, வக்கீல்கள் சமூகநீதிப் பேரவையினர் கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.