/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வக்கீல்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு
/
வக்கீல்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு
ADDED : நவ 15, 2025 02:00 AM
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல், சார்பு நீதிமன்றங்கள் உள்ளன. இங்குள்ள நீதிமன்றங்கள் கடந்த, 17 ஆண்டுகளாக தனியார் கட்டடத்தில் எவ்வித வசதிகளின்றி செயல்படுகிறது.
இதனால் மக்கள், போலீசார், அலுவலர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். நீதிமன்றம் கட்ட தேர்வு செய்த இடத்தில் கட்டடம் கட்ட நிதி ஒதுக்கவில்லை. அரசிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. எனவே, விரைவாக நீதிமன்ற கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வக்கீல்கள் கடந்த, 3 முதல், 7ம் தேதி வரை கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கடந்த, 11ல் கோர்ட் முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் முதல், தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அரூர் ஆர்.டி.ஓ., செம்மலை, பாப்பிரெட்டிப்பட்டி வக்கீல் சங்கத்திடம் இருந்து மனு பெற்றார். தொடர்ந்து, கலெக்டர், அரசு கூடுதல் தலைமை செயலாளருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியதுடன், இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று வக்கீல்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர்

