ADDED : மே 16, 2025 01:35 AM
பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட மருத்துவ பணிகள் துணை இயக்குனர் (தொழுநோய்) டாக்டர் புவனேஸ்வரி மேற்பார்வையில், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அரசு தலைமையில் தொழுநோய் ஊன தடுப்பு முகாம் நடந்தது. முகாமில் கடத்துார் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களில், 35 பேர் தொழுநோயாளிகளாக கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களுக்கு தொழுநோய் குறித்த சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை மருத்துவ அலுவலர்கள் கனல்வேந்தன், உதயகுமார் ஆகியோர் வழங்கினர்.
தொழுநோயாளிகளுக்கு சுய தடுப்பு மாத்திரை, மருந்து, காலணி, வாக்கிங் ஸ்டிக், போர்வை, வேட்டி, மருந்து பெட்டகம், ஊட்டச்சத்து மாத்திரை, முதலுதவி பெட்டகம், மாதாந்திர உதவி தொகை, ஏற்கனவே தொழுநோய் கண்டறியப்பட்டு மாதாந்திர உதவி தொகை பெறாதவர்களுக்கு, மாதாந்திர உதவி தொகை வழங்கப்பட்டது.
வட்டார மருத்துவ மேற்பார்வையாளர்கள் கரிகாலன், பாலசந்தர், சுகாதார ஆய்வாளர்கள் விஜய் ஆனந்த், ராஜேஷ் கண்ணன் பரத் விஜய், அஸ்வின், விக்னேஷ், சிலம்பரசன், தமிழரசன், உடல் இயக்க ஆண் செவிலியர்கள் காதர், பிரேம்நாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.