/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நுாலகத்துறை அலுவலர் ஒன்றிய மாவட்ட பொதுக்குழு கூட்டம்
/
நுாலகத்துறை அலுவலர் ஒன்றிய மாவட்ட பொதுக்குழு கூட்டம்
நுாலகத்துறை அலுவலர் ஒன்றிய மாவட்ட பொதுக்குழு கூட்டம்
நுாலகத்துறை அலுவலர் ஒன்றிய மாவட்ட பொதுக்குழு கூட்டம்
ADDED : ஜூலை 12, 2025 01:03 AM
தர்மபுரி, :தமிழ்நாடு அரசு பொது நுாலகத்துறை அலுவலர் ஒன்றியம் சார்பில், மாவட்ட பொதுக்குழு கூட்டம், தர்மபுரி மாவட்ட மைய நுாலக வளாகத்தில் நடந்தது.
மாவட்ட தலைவர் மாதேஸ்வரன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் மாதேஸ்வரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் தும்பாராவ் வரவேற்றார். இதில், ஊர்புற நுாலகங்களை, கிளை நூலகங்களாக தரம் உயர்த்த வேண்டும்.
ஊர்புற நுாலகர்களுக்கு, 3ம் நிலை நுாலகர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, தீர்மானம் நிறைவேற்றினர். நுாலகர்கள் அனைவரும் கோரிக்கை மனுவில் கையெழுத்திட்டு, முதல்வர், பொது நுாலக இயக்குனர், மாவட்ட நுாலக அலுவலர் ஆகியோருக்கு தீர்மான மனுவை அனுப்பி வைத்தனர்.