/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
எல்.ஐ.சி., முகவர்கள் ஆர்ப்பாட்டம்
/
எல்.ஐ.சி., முகவர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 29, 2024 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எல்.ஐ.சி., முகவர்கள் ஆர்ப்பாட்டம்
அரூர், அக். 29-
தர்மபுரி மாவட்டம், அரூர் எல்.ஐ.சி., கிளை அலுவலகம் முன், எல்.ஐ.சி., முகவர்கள் சங்கம் அரூர் கிளை சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தலைவர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார். செயலாளர் குமரவேல் வரவேற்றார். சேலம் கோட்ட தலைவர் இளையப்பன் பேசினார். பாலிசிதாரர்கள் போனசை உயர்த்த வேண்டும். பாலிசிக்கான ஜி.எஸ்.டி.,யை நீக்க வேண்டும். பாலிசிக்கான கடன் வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. நிர்வாகிகள் ஆனந்தன், சின்னராஜ், ஹேமலதா, சிந்தனயாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

