/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மின்னல் தாக்கி 5 பசு மாடுகள் முதியவர் பலி
/
மின்னல் தாக்கி 5 பசு மாடுகள் முதியவர் பலி
ADDED : மே 16, 2025 01:36 AM
அரூர்,அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், நேற்று முன்தினம் மாலை முதல், நள்ளிரவு வரை சூறைக்காற்று மற்றும் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
அப்போது, பையர்நாயக்கன்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட உட்டப்பட்டியை சேர்ந்த காளியப்பன், 60, என்பவர் மாட்டுக் கொட்டகையில் படுத்திருந்தார். அப்போது, மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார்.
மேலும் அவருக்கு சொந்தமான ஒரு கறவை மாடு மற்றும் கன்றுகுட்டி பலியானது. அதே போல், ரங்கன்வலசையை சேர்ந்த தனபால் என்பவரது, 2 பசு மாடுகள் மின்னல் தாக்கி இறந்தன. புறாக்கல் உட்டையை சேர்ந்த மாணிக்கம் என்பவரது மாடு மின்னல் தாக்கியதில் இறந்தது.
அரூர் பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால், பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததில் மின் கம்பிகள் அறுந்தன.
அதேபோல், பேனர்கள் மின்கம்பிகள் மீது விழுந்தன. மின்துறையினர் இவற்றை அகற்றி, சீரமைப்பு பணி மேற்கொண்டனர்.