/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
/
லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : நவ 24, 2025 01:10 AM
தர்மபுரி: பழைய தர்மபுரியில் நடந்த, லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷே-கத்தை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தர்மபுரி அடுத்துள்ள, பழைய தர்மபுரியில் லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில் நேற்று காலை, 9:00 மணிக்கு கடம்புறப்பாடு நடந்தது. இதையடுத்து, லிங்கேஸ்வரர், அர்த்தநா-ரீஸ்வரர் மற்றும் நந்திக்கு சுவாமிகளுக்கு யாகசாலையில் வைத்து, பூஜிக்கப்பட்ட கலச நீர் தெளிக்கப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, தச தரிசனம் மஹா தீபாராதனை நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் மூலவர் அருள் பாலித்தார். சிவனடியார்-களின் திருவாசகம் முற்றோதல், அதை தொடர்ந்து கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடு-களை விழா குழுவினர் செய்திருந்தனர்.

