/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
68 பேருக்கு ரூ.38.18 கோடி கடனுதவி
/
68 பேருக்கு ரூ.38.18 கோடி கடனுதவி
ADDED : நவ 18, 2024 01:54 AM
தர்மபுரி: தர்மபுரியில், 71வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நடந்-தது. இதில், சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் மற்றும், 68 கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு, 38.18 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகளை, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் வழங்கி பேசினார்.
முன்னதாக, கூட்டுறவுத்துறை, வேளாண் துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலை துறை சார்பில், அமைக்கப்-பட்ட கண்காட்சி அரங்குகளை அமைச்சர் பார்வையிட்டார். தொடர்ந்து, 10 பேருக்கு பயிர் கடனாக, 7.79 லட்சம் ரூபாய்; 5 பேருக்கு கால்நடை பராமரிப்பு கடன், 2.80 லட்சம் ரூபாய்; 48 பேருக்கு மகளிர் சுய உதவிக்கடன், டாம்கோ குழு கடன், மாற்-றுத்திறனாளி கடன்கள் என, 28.8 கோடி ரூபாய்; 3 பேருக்கு, 33 லட்சம் ரூபாய் மதிப்பில், டிராக்டர்; 2 பேருக்கு, 50 லட்சம் ரூபாய் மதிப்பில் ஈச்சர் வாகனம் என, 68 கூட்டுறவு சங்க உறுப்பி-னர்களுக்கு, 38.18 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளை, அமைச்சர் பன்னீர்செல்வம் வழங்கினார்.இதில், தர்மபுரி கலெக்டர் சாந்தி, பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஜி.கே.மணி, வெங்கடேஷ்வரன், தி.மு.க., மாவட்ட செயலா-ளர்கள் தடங்கம் சுப்பிரமணி, பழனியப்பன் உட்பட துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்-டனர்.