/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
உள்ளாட்சி பணியாளர் சம்மேளனம் ஆர்ப்பாட்டம்
/
உள்ளாட்சி பணியாளர் சம்மேளனம் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 14, 2025 02:09 AM
தர்மபுரி, ஏ.ஐ.டி.யு.சி., உள்ளாட்சி பணியாளர் சம்மேளனத்தின் தர்ம
புரி மாவட்டக்குழு சார்பில், கலெக்டர் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர்கள் மனோகரன், வசந்தி ஆகியோர் தலைமை வகித்தனர். ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட பொது செயலாளர் மணி, மாவட்ட துணை தலைவர் சுதர்சனன், தனியார் மோட்டார் சங்க மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், பள்ளிக் கல்வி தூய்மை பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் செல்வி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஆர்பாட்டத்தில், உள்ளாட்சி, டவுன் பஞ்., நகராட்சி, ஊரக வளர்ச்சி, கணினி இயக்குபவர்கள், ஊராட்சி ஊக்குனர்கள், பள்ளி கல்வி துறைகளில், 10 மற்றும், 15 ஆண்டுகளாக தினக்கூலியாக பணியாற்றி வரும் பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். அரசு அறிவித்துள்ள கொரோனா ஊக்கத்தொகை, 15,000 ரூபாய் உடனே வழங்க வேண்டும். வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு பணிவரன் முறைப்படுத்தி ஊதிய உயர்வு வழங்க வேண்டும். 60 வயது முடித்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை
கள் வலியுறுத்தப்பட்டன.

