/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மாணவியருக்கு தொல்லை கொடுக்கும் வாலிபர்களால் பெற்றோர் அச்சம்
/
மாணவியருக்கு தொல்லை கொடுக்கும் வாலிபர்களால் பெற்றோர் அச்சம்
மாணவியருக்கு தொல்லை கொடுக்கும் வாலிபர்களால் பெற்றோர் அச்சம்
மாணவியருக்கு தொல்லை கொடுக்கும் வாலிபர்களால் பெற்றோர் அச்சம்
ADDED : நவ 14, 2025 02:08 AM
அரூர்,அரூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மாணவியர், அரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கின்றனர். இவர்கள், காலை மற்றும் மாலை நேரங்களில், பள்ளிக்கு வரும் போதும், பின், பள்ளி முடிந்து மாலையில் செல்லும்போதும், அங்குள்ள பஸ் நிறுத்தம் மற்றும் மேல்பாட்சாபேட்டை பகுதியில், சில வாலிபர்கள், பைக்குகளில் விரட்டிச்சென்று மாணவியரை கேலி, கிண்டல் செய்தும், காதல் வலையில் சிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டும் வருகின்றனர். இதை தட்டி கேட்க முடியாமல், மாணவியர் தவிக்கின்றனர்.
அதேபோல், பஸ் ஸ்டாண் டில் பஸ்சுக்கு காத்திருக்கும் போதும், மாணவியரை தொந்தரவு செய்கின்றனர். இதனால், மாணவியர் வீடு திரும்பும் வரை, பெற்றோர் அச்சத்துடன் இருக்கின்றனர். எனவே, மாணவியரை கிண்டல் செய்யும் வாலிபர்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுப்பதுடன், அப்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.