/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நீதிமன்ற கட்டடம் கட்ட நிதி கோரி வக்கீல்கள் தொடர் உண்ணாவிரதம்
/
நீதிமன்ற கட்டடம் கட்ட நிதி கோரி வக்கீல்கள் தொடர் உண்ணாவிரதம்
நீதிமன்ற கட்டடம் கட்ட நிதி கோரி வக்கீல்கள் தொடர் உண்ணாவிரதம்
நீதிமன்ற கட்டடம் கட்ட நிதி கோரி வக்கீல்கள் தொடர் உண்ணாவிரதம்
ADDED : நவ 14, 2025 02:07 AM
பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல், சார்பு நீதிமன்றங்கள் உள்ளன. இங்குள்ள நீதிமன்றங்கள் கடந்த, 17 ஆண்டுகளாக தனியார் கட்டடத்தில் எவ்வித வசதிகளின்றி செயல்படுகிறது.
இதனால் மக்கள், போலீசார், அலுவலர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். நீதிமன்றம் கட்ட தேர்வு செய்த இடத்தில் கட்டடம் கட்ட நிதி ஒதுக்கவில்லை. \அரசிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. எனவே, விரைவாக நீதிமன்ற கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வக்கீல்கள் கடந்த, 3 முதல், 7ம் தேதி வரை கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து கடந்த, 11ல் கோர்ட் முன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முதல், தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பாப்பிரெட்டிப்பட்டி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தசாமி வக்கீல்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இந்த போராட்டத்தால் கோர்ட் பணிகள் முடங்கின.