/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை; வீடியோவில் பதிவு செய்ய நடவடிக்கை
/
லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை; வீடியோவில் பதிவு செய்ய நடவடிக்கை
லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை; வீடியோவில் பதிவு செய்ய நடவடிக்கை
லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை; வீடியோவில் பதிவு செய்ய நடவடிக்கை
ADDED : மே 23, 2024 07:17 AM
தர்மபுரி : தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், லோக்சபா தேர்தல்- ஓட்டு எண்ணிக்கை நாளன்று மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து, ஓட்டு எண்ணும் அலுவலருக்கான பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. இதில், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான சாந்தி தலைமை வகித்தார்.
தர்மபுரி லோக்சபா தொகுதியில், ஏப்., 19ல் பதிவான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் செட்டிக்கரையிலுள்ள தர்மபுரி அரசு பொறியியல் கல்லுாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ஜூன், 4ல் ஓட்டு எண்ணிக்கையின்போது, ஓட்டு எண்ணும் பணி முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட உள்ளது என கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.
தர்மபுரி லோக்சபா தொகுதியில் பதிவான ஓட்டுகள் ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் தலா, 14 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக மேசைக்கு ஒரு ஓட்டு எண்ணும் மேற்பார்வையாளர், ஓட்டு எண்ணும் உதவியாளர் மற்றும் நுண்பார்வையாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்காக நேற்று பயிற்சி நடந்தது. முன்னதாக, கலெக்டர் அலுவலகத்தில் ஓட்டு எண்ணிக்கை நாளன்று மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த, ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது.
இதில், மாவட்ட எஸ்.பி.,ஸ்டீபன் ஜேசுபாதம், டி.ஆர்.ஓ., பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சையது முகைதீன் இப்ராகிம், ஆர்.டி.ஓ., வில்சன்ராஜசேகர், காயத்ரி, மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தாசில்தார்கள் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

