/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
லாரி உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு
/
லாரி உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு
ADDED : அக் 22, 2025 01:19 AM
தர்மபுரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம், தர்மபுரியில் நேற்று நடந்தது. இதில், அகில இந்திய மோட்டார் காங்., டிரான்ஸ்போர்ட் மாநில துணை தலைவர் நாட்டான் மாது தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வனராஜா, மாவட்ட செயலாளர் சுரேஷ், மாவட்ட பொருளாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில், தொப்பூர் மற்றும் பாலக்கோடு சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்சூரன்ஸ் கட்டணத்தை வரைமுறை படுத்த வேண்டும். வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வாகனங்களுக்கான வருடாந்திர எப்.சி., கட்டணத்தை நெறிமுறை படுத்த வேண்டும். லாரி உரிமையாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கான தண்டனையை கடுமையாக்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.