/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அதிக ஒலியுடன் 'ஏர்ஹாரன்்' அரூர் பகுதி மக்கள் அவதி
/
அதிக ஒலியுடன் 'ஏர்ஹாரன்்' அரூர் பகுதி மக்கள் அவதி
ADDED : அக் 05, 2025 01:20 AM
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் வழியாக, சேலம், தர்மபுரி, சென்னை, திருவண்ணாமலை, ஓசூர், உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு, அரசு மற்றும் தனியார் பஸ்கள் உள்பட, ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் அரூர், போக்குவரத்து மிகுந்த பகுதியாக உள்ளது. அரூரில் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பஸ்களில், எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல், அதிக ஒலியுடன் கூடிய ஏர்ஹாரன்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதுபோன்ற வாகனங்கள் நகரில் நுழைவதில் இருந்து, பஸ் ஸ்டாண்ட் வரை, 2 கி.மீ., துாரத்திற்கு ஒரு சில பஸ் டிரைவர்கள் அதிக சப்தத்துடன் ஏர் ஹாரன்களை அடித்த படி செல்கின்றனர். பள்ளி, வங்கிகள் மற்றும் மருத்துவமனைகள் வழியாக செல்லும்போது, அதிக ஒலி எழுப்புகின்றன.
இதனால் பள்ளி மாணவ, மாணவியருக்கும் இடையூறு ஏற்படுகிறது. மேலும், சாலையில் செல்லும்போது திடீரென அலறும் வகையில், ஏர்ஹாரன் அடிப்பதால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் அதிர்ச்சி அடைவதுடன், விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே, அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.