/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரி மாவட்ட உழவர் சந்தைகளில் ரூ.48 லட்சத்துக்கு காய்கறி விற்பனை

ADDED : அக் 05, 2025 01:19 AM
தர்மபுரி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில், நேற்று புரட்டாசி மாதம், 3வது சனிக்கிழமையையொட்டி, 48 லட்சம் ரூபாய்க்கு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனையானது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள, 6 உழவர் சந்தைகளில் நேற்று புரட்டாசி, 3வது சனிக்கிழமையை ஒட்டி, காய்கறி மற்றும் பழங்கள் கூடுதலாக விற்பனையானது.
கடந்த செப்., 27 அன்று, 2வது சனிக்கிழமை, மாவட்டத்திலுள்ள, 6 உழவர் சந்தைகளில் மொத்தம், 99 டன் காய்கறிகள், 7 டன் பழங்கள் என, 37 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று மேலும், விற்பனை அதிகரித்து காணப்பட்டது.
இதில், 293 விவசாயிகள் கொண்டு வந்த காய்கறிகள், தர்மபுரி உழவர் சந்தையில், 45 டன், பாலக்கோட்டில், 20 டன், பென்னாகரம், 8, அரூர், 10, ஏ.ஜெட்டிஹள்ளி, 26, காரிமங்கலத்தில், 4 டன் காய்கறிகள் என மொத்தம், 113 டன் காய்கறிகள், 9 டன் பழங்கள் ஆகியவை மொத்தம், 48 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. இதை, 26,623 நுகர்வோர்
வாங்கிச்சென்றனர்.