ADDED : டிச 22, 2024 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பென்னாகரம், டிச. 22-
அம்பேத்கர் குறித்து அவதுாறாக பேசிய மத்திய உள்ளதுறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, மா.கம்யூ., கட்சியினர் பென்னாகரம் பஸ் ஸ்டாண்டில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியின் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். தர்மபுரி மாவட்ட செயலாளர் சிசுபாலன், மாநில குழு உறுப்பினர் குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதன் ஆகியவர்கள் பேசினர். அம்பேத்கர் குறித்து அவதுாறாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, கண்டனம் முழக்கங்களை எழுப்பினர்.