/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா
/
நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா
ADDED : ஏப் 27, 2024 06:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி : தர்மபுரி அடுத்த தம்மனம் பட்டி அருகே எம்பிரானஹள்ளியில், மாரியம்மன், நஞ்சுண்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.கடந்த, 18ல் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
முக்கிய நாளான நேற்று, யாகசாலையில் வைத்து பூஜை செய்த தீர்த்தக்குடங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று, கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. மாரியம்மன், நஞ்சுண்டேஸ்வரர் மூலவர் தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

