/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மஹா வாராஹி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
/
மஹா வாராஹி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 11, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்கோடு, தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த மாதம்பட்டியிலுள்ள மஹா வாராஹி அம்மன் கோவிலில், கும்பாபிஷேக விழா நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு கலச ஆராதனை, நவகிரக ஹோமம் நடந்தது. இதையடுத்து யாகசாலையிலிருந்து புனித நீர் கலசம் மற்றும் பால் குடத்தை கோவில்
முக்கியஸ்தர்கள் தங்கள் தலையில் சுமந்து பிரகார வலம் வந்தனர். பின் கோயில்கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடந்தது.தொடர்ந்து சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மலர் அலங்காரம் செய்து மஹா தீபாராதனை நடந்தது. விழாவில், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.