/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மகாமுனீஸ்வரன் சுவாமி கோவில் தேர் திருவிழா
/
மகாமுனீஸ்வரன் சுவாமி கோவில் தேர் திருவிழா
ADDED : ஆக 11, 2025 08:07 AM
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த, தாண்டியப்பனுார் கிராமத்தில் எழுந்தருளியுள்ள, மகா முனீஸ்வரன் சுவாமி கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. அதிகாலை முதலே, மகாமுனீஸ்வரன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து, திருத்தேர் வீதி உலா நடந்தது. இதில் தாண்டியப்பனுார் ஊர்மக்கள் ஆரத்தி எடுத்து அமோக வரவேற்பு கொடுத்தனர்.
மேள, தாளம் முழங்க திருத்தேர் வீதி உலா நடந்தது. இதில் பக்தர்கள் வேல், கரகம் எடுத்து, ஆடு, கோழி பலியிட்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை டவுன் பஞ்., தலைவர் அமானுல்லா, துணைத் தலைவர் கலைமகள் தீபக், கவுன்சிலர் குமரேசன், சுமத்ரா தவமணி உள்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் தொழிலதிபர் தர்மலிங்கம், கோபி, ஊர் நாட்டார் சேகர் மற்றும் ஊர் பொதுமக்கள், விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.