/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பெண்ணை தற்கொலைக்கு துாண்டிய கள்ளக்காதலன் கைது
/
பெண்ணை தற்கொலைக்கு துாண்டிய கள்ளக்காதலன் கைது
ADDED : ஜூலை 13, 2025 01:27 AM
மொரப்பூர், :பெண்ணை தற்கொலைக்கு துாண்டிய கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த கணபதிபட்டியை சேர்ந்தவர் முருகன், 42. இவரது மனைவி கீதா, 35. தம்பதிக்கு, 2 ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த, 10ல் மதியம், 1:45 மணிக்கு கீதா பூச்சி கொல்லியை குடித்ததால், அவரை மொரப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்தார். மனைவி சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது கணவர் முருகன் புகார் படி, மொரப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், கணபதிப்பட்டியை சேர்ந்த ஸ்டாலின், 37, என்பவருக்கும், கீதாவிற்கும் கடந்த, 6 ஆண்டுகளாக பழக்கம் இருந்துள்ளது. கணவருடன் கருத்து வேறுபாடால், 3 ஆண்டு
களுக்கு முன், தர்மபுரியிலுள்ள தன் பெற்றோர் வீட்டிற்கு கீதா சென்று விட்டார். அங்கும் ஸ்டாலின் சென்று வந்துள்ளார்.
உறவினர்களின் அறிவுரை படி கீதா, கடந்த, 20 நாட்களுக்கு முன் கணவர் வீட்டிற்கு சென்று அவருடன் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்தார். அங்கு வந்த ஸ்டாலினை, இனி வீட்டிற்கு வரவேண்டாம் என கீதா கூறியதால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த, 10ம் தேதி இருவரும், ஆர்.கோபிநாதம்பட்டிக்கு பைக்கில் சென்றுள்ளனர். அப்போது, பூச்சிக்கொல்லியை குடித்து விட்டதாக கூறிய கீதா, வாந்தி எடுத்து மயங்கினார். அவரை மொரப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து விட்டு ஸ்டாலின், அங்கிருந்து சென்று விட்டார். அதன்பின் கீதா இறந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, கீதாவை தற்கொலைக்கு துாண்டியதாக, ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர்.