ADDED : ஜூலை 23, 2026 01:39 AM
அ நிறம் | அளவு
தர்மபுரி: ஏரியூர் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார், நேற்று முன்-தினம் ஏரியூர் பகுதி யில் ரோந்து சென்றனர். அப்போது,
சிகரலப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகில் நின்ற நபர், போலீசாரை பார்த்தும் தப்பியோட முயன்றார்.
அவரை மடக்கி பிடித்து சோத-னையிட்டதில், 250 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது. விசா-ரணையில், அவர் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ், 41, என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து கஞ்சா மற்றும் மொபைலை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
