ADDED : செப் 11, 2026 03:35 AM
அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அடுத்த பண்டாரசெட்டிப்பட்-டியை சேர்ந்தவர் பிரபாகரன், 52. இவர், சேலம் மாவட்டம் கே.என்.புதுாரில் ஆர்.ஓ., நிறுவனம் வைத்து தொழில் செய்து வந்தார்.
நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பிரபாகரன், உறவின-ரான கணேசன் என்பவரது கோழிப்பண்ணையின் அருகே சென்-றவர் வெகு நேரமாகியும் திரும்பவில்லை. அவரை தேடி கணேசன் சென்றபோது, கோழி பண்ணையின் அருகே வாய் மற்றும் மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில், மர்மமான முறையில் பிரபாகரன் இறந்து கிடந்தார். அவரின் சகோதரி மலர் புகார் படி, பொம்மிடி போலீசார் விசாரிக்கின்றனர்.
