/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மொபட்டில் இருந்து தவறி விழுந்தவர் பலி
/
மொபட்டில் இருந்து தவறி விழுந்தவர் பலி
ADDED : செப் 09, 2025 02:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மொரப்பூர், அரூர் வர்ணதீர்த்தத்தை சேர்ந்தவர் ராஜிவ்காந்தி, 37. இவர், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் துணி வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் மதியம், 3:00 மணிக்கு, பர்கூரில் இருந்து ஹீரோ ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டியில், அரூருக்கு வந்தார்.
அரூர் - மொரப்பூர் சாலையில், சுண்டாங்கிப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, நிலைதடுமாறி ஸ்கூட்டியில் இருந்து கீழே விழுந்தார். இதில், தலையில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மொரப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.