/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
டூவீலரில் இருந்து கீழே விழுந்தவர் உயிரிழப்பு
/
டூவீலரில் இருந்து கீழே விழுந்தவர் உயிரிழப்பு
ADDED : ஜூலை 30, 2025 02:01 AM
அரவக்குறிச்சி,  மலைக்கோவிலுார் அருகே, டூவீலரில் சென்று கொண்டிருந்தவர் நிலை தடுமாறி கீழே விழுந்ததால் உயிரிழந்தார்.திருப்பத்தூர் மாவட்டம், தேவாங்கர் தெரு மணிவண்ணன் என்பவரது மகன் ரகுபதி, 27. இவர் கரூர்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் இரவு யமஹா எப்இசட் வாகனத்தில் வேகமாக சென்று கொண்டிருந்தார்.
இதனால் கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓரத்தில் இருந்த இரும்பு தடுப்பில் மோதியது. இந்த விபத்தில் நிலைதடுமாறி, கீழே விழுந்த ரகுபதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ரகுபதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.அரவக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

