/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மலை தேனீக்களிடமிருந்து தப்பிக்கஓடியவர் கீழே விழுந்து உயிரிழப்பு
/
மலை தேனீக்களிடமிருந்து தப்பிக்கஓடியவர் கீழே விழுந்து உயிரிழப்பு
மலை தேனீக்களிடமிருந்து தப்பிக்கஓடியவர் கீழே விழுந்து உயிரிழப்பு
மலை தேனீக்களிடமிருந்து தப்பிக்கஓடியவர் கீழே விழுந்து உயிரிழப்பு
ADDED : ஏப் 22, 2025 01:37 AM
அஞ்செட்டி:கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே உரிகம் மலை கிராமத்தை சேர்ந்தவர் மாதேவன், 56. விவசாயி. இவருடன், அதே பகுதியை சேர்ந்த, 15க்கும் மேற்பட்டோர் நேற்று, சுவாமி தரிசனம் செய்ய, கோவள்ளி கிராமத்திற்கு செல்லும் சாலையிலுள்ள மலை மாதேஸ்வரன் கோவிலுக்கு சென்றனர்.
காலை, 7:30 மணிக்கு, சுவாமிக்கு பிரசாதம் தயார் செய்ய, கோவில் அருகே விறகு அடுப்பை எரிய வைத்தனர். அப்போது கடும் புகை வெளியேறி, மரத்திலிருந்த மலை தேனீ க்கள் கலைந்து, பக்தர்களை கொட்டின. அதனிடமிருந்து தப்பிக்க ஓடிய மாதேவன், கல் தடுக்கி கீழே விழுந்ததில் உயிரிழந்தார்.
மேலும், 6 பேர் தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்தனர். அஞ்செட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.