/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கவுதாரி வேட்டையாட முயன்றவருக்கு அபராதம்
/
கவுதாரி வேட்டையாட முயன்றவருக்கு அபராதம்
ADDED : மார் 05, 2025 08:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: அரூர் அடுத்த தீர்த்தமலை காப்புக்காடு மூலலைன் சரக பகுதியில், கடந்த, 1ல் தர்மபுரி வனப்பாதுகாப்பு படையினர் மற்றும் தீர்த்தமலை வனத்துறையினர் ரோந்து சென்றனர்.
அங்கு புதை வலை வைத்து காடை மற்றும் கவுதாரியை வேட்டையாட முயன்ற பையர்நாயக்கன் பட்டியை சேர்ந்த சின்னராஜ், 64, என்பவரை பிடித்தனர். அவருக்கு மாவட்ட வனஅலுவலர் ராஜாங்கம், 10,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.