/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
எஸ்.பி., ஆபீசில் தீக்குளித்தவர் சாவு
/
எஸ்.பி., ஆபீசில் தீக்குளித்தவர் சாவு
ADDED : ஜூன் 10, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, நல்லம்பள்ளி அடுத்த ராஜாதோப்பு கிராமத்தை சேர்ந்த ஜெயராமன், 52. இவர், விவசாய தொழில் செய்து வருகிறார். தன்னிடம் நிலப்பத்திரத்தை திருப்பித்தர மறுத்த நபர் மீது புகார் அளிக்க கடந்த, 4ல் தர்மபுரி எஸ்.பி., அலுவலகத்திற்கு வந்துள்ளார்.
அப்போது, தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு, சிகிச்சைக்கு அனுப்பினர். அவருக்கு உடலில், 60 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில், தொடர்ந்து ஜெயராமனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று மாலை ஜெயராமன் உயிரிழந்தார். தர்மபுரி டவுன் போலீசார்
விசாரிக்கின்றனர்.