/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மாரியம்மன் கோவில் திருவிழா: பெண்கள் மாவிளக்கு வழிபாடு
/
மாரியம்மன் கோவில் திருவிழா: பெண்கள் மாவிளக்கு வழிபாடு
மாரியம்மன் கோவில் திருவிழா: பெண்கள் மாவிளக்கு வழிபாடு
மாரியம்மன் கோவில் திருவிழா: பெண்கள் மாவிளக்கு வழிபாடு
ADDED : ஜூன் 12, 2025 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்கோடு, தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பொரத்துார் கிராமத்தில், முத்து மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நேற்று அதிகாலை முதலே, முத்து மாரியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தன. பின், சுவாமி கரகம் புறப்பாடு நடந்தது.
இதில் பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக முத்துமாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு, பொங்கல் வைத்து, கிடா வெட்டி அம்மனை வழிபட்டனர். ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் மற்றும் ஊர்மக்கள் செய்திருந்தனர்.