sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சாமந்தி பூ விலை உயர்வு

/

சாமந்தி பூ விலை உயர்வு

சாமந்தி பூ விலை உயர்வு

சாமந்தி பூ விலை உயர்வு


ADDED : ஜன 14, 2025 02:11 AM

Google News

ADDED : ஜன 14, 2025 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர், கம்பைநல்லுார் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட ஏக்கரில், விவசாயிகள் சாமந்தி பூ சாகுபடி செய்துள்-ளனர். இந்நிலையில், பொங்கலை முன்னிட்டு சாமந்தி பூ விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறிய தாவது: பொங்கல் பண்டிகை வரு-வதால், சாமந்தி பூக்களுக்கு கடும் கிராக்கி ஏற்படும். இதை கருத்தில் கொண்டு விவசாயிகள் சாமந்தி பூவை சாகுபடி செய்-துள்ளனர். சமீபத்தில் பெய்த

தொடர்மழையால், பல இடங்களில் பூக்கள் அழுகியதால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டது. நேற்று முன்தினம் வரை, ஒரு கிலோ சாமந்தி பூக்களை வியாபா-ரிகள் கிலோ, 60 ரூபாய்க்கு கொள்முதல் செய்தனர்.

பொங்கலை-யொட்டி நேற்று, ஒரு கிலோ சாமந்தி, 140 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்-ளனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.இருந்த போதிலும், பூ கடைகளில், ஒரு கிலோ சாமந்தி பூ, 320 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us