/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மாசி மக தேரோட்ட விழா கொடியேற்றம்
/
மாசி மக தேரோட்ட விழா கொடியேற்றம்
ADDED : பிப் 25, 2024 03:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: அரூர் அடுத்த தீர்த்தமலையில், தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது.
இதன் மாசிமக தேரோட்ட விழாவையொட்டி, நேற்று, முன்தினம் விநாயகர் பூஜை, கணபதி ஹோமம் நடந்தது. நேற்று, தீர்த்தகிரீஸ்வரர் உடன் வடிவாம்பிகைக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடத்தப்பட்டு கொடியேற்றப்பட்டது. இன்று, சுவாமி திருவீதி உலாவும் நடக்கிறது. நாளை, திருவிளக்கு பூஜையும், 28ல் சுவாமி திருக்கல்யாணமும் நடக்கவுள்ளது. தேரோட்டம் வரும், மார்ச், 1ல் நடக்க உள்ளது.